Wednesday, July 1, 2009

மொஜில்லா பயர் பாக்ஸ் - Mozilla Fire Fox application

நான் என் கணினியில் 'லினக்ஸ்' உபயோகிக்கிறேன். இதில் தமிழில் நன்றாக எழுத வருகிறது. நாம் எழுதும்பொழுது தவறானால் 'ப்றோம்ப்டர்' (prompter) வார்த்தைகள் கூட வருகின்றன. விமரிசனம் எழுத ஈமெயில் 'கம்போஸ்' இல் தமிழில் எழுதி 'கட், பேஸ்ட்' செய்ய முடிகிறது. கொஞ்ச நேரம் எழுத ஆரம்பித்தவுடன் பழகிவிடுகிறது. ஆங்கிலத்தில் எழுதி 'space bar' அழுத்தியதும் தமிழில் மாறுகிறது.

சரவணன் மற்றும் கனகராஜ் கொடுத்த பயன்பாட்டு விதங்களையும் உபயோகித்துப பார்க்கிறேன், இதில் கஷ்டமாக இருந்தால். யாருக்காவது இந்த விதத்தை உபயோகிக்க வேண்டுமென்றால் முகவரியைக் கீழே கொடுக்கிறேன்:

http://www.mozilla.com/en-US/

நன்றி.

Thursday, November 20, 2008

தமிழ் ப்ளாக்

கொஞ்ச மாதங்களுக்கு முன்பு நான் சில தமிழ் ப்ளாக் எழுதி இருந்தேன். அப்பொழுது நான் பயர்பாக்ஸ் அப்ளிகேசன் உதவியுடன் எழுதினேன். இப்பொழுது கொஞ்ச நாட்களாக ஒபேரா அப்ளிகேசன் யூஸ் பண்ணுகிறேன்.

ஒரு நாள், என் பழைய தமிழ் ப்ளாக் படிக்கப் பார்த்தால், ஒன்றும் புரியவில்லை. எடிட் பண்ணவும் முடியவில்லை. திரும்பவும் பயர்பாக்ஸ் அப்ளிகேசன் மூலம் தமிழ் ப்ளாக் பார்த்தால் எல்லாம் சரியாக இருக்கிறது! இப்பொழுது இந்த ப்ளாக் கூட பயர்பாக்ஸ் மூலம்தான் எழுதுகிறேன்.

தமிழ் ப்ளாக் எழுதுபவர்கள், பயர்பாக்ஸ்தான் யூஸ் செய்ய வேண்டுமா?

Sunday, October 5, 2008

ராகமாலிகா - ஜெயா டிவி நிகழ்ச்சி, பாட்டுப் போட்டி

ஞாயிறுதோறும் காலை பத்து மணிக்கு ஜெயா டிவியில் வரும் 'ராக மாலிகா' நிகழ்ச்சி, இப்பொழுது இருக்கும் பாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் முதல் இடத்தில் இருக்கிறது. கடைசி சுற்றுக்களில் நன்றாகவே இருக்கிறது. ஹிந்தி பாட்டுப்போட்டி நிகழ்ச்சிகளில் இருக்கும் (ஸ்டார் வாயிஸ் ஆப் இந்தியா) சில முறைகளை இதிலும் கடைப்பிடித்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அவைகளில் சில:

1. பாடகர்கள் பாட்டை மனப்பாடம் செய்து பாட வேண்டும். இதனால் பாவம் கொடுப்பதில் கவனம் செலுத்துவது சுலபமாக இருக்கும்.

2. உச்சரிப்பில் இன்னும் கவனம் வேண்டும்.

3. பாட்டுக்களை தேர்ந்தெடுப்பதில் நிகழ்ச்சியெய் நடத்துபவரும் டிப்ஸ் கொடுக்கலாம் - இளையராஜா பாட்டு சுற்றில் கேள்விப்படாத பாட்டுக்கள் வந்தன. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்லி பாடுவது என்னும்போது, சிலர் பாட்டு வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம், அல்லது அந்த காலத்தில் புகழ் பெற்ற பாட்டு என்று சொல்லலாம். அதில் தவறு இல்லை. அனால், நிகழ்ச்சி நடத்துபவர்கள், பாடகர்களை குறைந்தது மூன்று பாட்டு இளையராஜாவுடையது பாடத்தெரிந்திருக்கநும் என்று சொல்லி, அதில் ஒன்றை பாடச்சொல்லலாம்.

4. நிறைய பேருக்கு ஷ்ருதி சுத்தம் இல்லை. நிறைய நடுவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள், நல்ல வேளை! முடிந்தவரை அவர்கள் 2 சுற்றுக்குள் ஸ்ருதியெய் சரி செய்து கொள்ளவேண்டும். ஒரு நல்ல பாட்டு சொல்லிக் கொடுப்பவரை வைத்து திருத்த முடிந்தால் திருத்தலாம்.

5. நடுவர்களாக வருபவர்கள் குரு இடத்தில் இருப்பவர்கள். அவர்களுக்கு காலைத்தொட்டு கும்பிட்டு ஆரம்பிக்கவில்லை என்றாலும், கையெடுத்து கும்பிட்டு முதல் பாட்டை ஆரம்பிக்கலாம். முடிவில் பரிசு வாங்கும்போதும் கண்டிப்பாக மரியாதை காண்பிக்க வேண்டும். இதை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்லிக் கொடுக்கவில்லையென்றால், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் இதை கண்டிப்பாக செய்ய வைக்க வேண்டும்.

நிகழ்ச்சி தொகுப்பாளராக வரும் பாலாஜி நன்றாக செய்கிறார். நல்ல வேளை, இப்பொழுது, recorded சிரிப்பு வருவதில்லை!

ராக மாலிகா இருநூற்று ஐம்பத்து வாரங்களைத் தாண்டிவிட்டது. ஐம்பத்து, நூறு, நூற்றி ஐம்பத்து, இருநூறு, இருநூற்றைம்பது வாரங்களைக் கொண்டாடும்பொழுது பாடியவர்கள், இந்த நிகழ்ச்சி மூலமாக இன்று பின்னணிப்பாடகர்களாக மலர்திருப்பவர்கள். நல்ல பாட்டுக்களைத் தேர்ந்தெடுத்து ரொம்ப நன்றாகப் பாடினார்கள். நல்ல பாட்டு தேர்ந்தெடுப்பதில் பாடகர்கள் இன்னும் கவனம் செலுத்தினால் இந்த நிகழ்ச்சியெய் வேறு எந்த பாட்டுப் போட்டி நிகழ்ச்சியும் முந்த முடியாது எனபது நிச்சயம்.

Sunday, September 21, 2008

தமிழ் நிகழ்ச்சிகள் - விவிதபாரதி

நான் விவிதபாரதியின் ரொம்ப வருட ரசிகை! ஹிந்தி, தமிழ் நிகழ்ச்சிகள், விளம்பரத் தடங்கல், பேச்சுத் தடங்கல் அதிகம் இல்லாமல் இருப்பதால் கொஞ்சம் அமைதியாக ரேடியோ கேட்க்கலாம்! அதுவும் காலையில் சமையல் செய்து கொண்டே ட்ரான்ஸ்ஸிஸ்தரில் பாட்டு கேட்க ரொம்ப பிடிக்கும்!

பக்திப் பாடல்களில் பழைய TMS, SPB, சுஷீலா, ஜானகி, இளையராஜா பாட்டுக்கள் கேட்க இனிமையாக இருக்கும். அப்புறம் எட்டு மணிக்கு மருத்துவர்கள் ஐந்து நிமிடம் வெவ்வேறு வியாதிகள் குறித்து ஆலோசனைகள் சொல்வார்கள். ரொம்ப நல்ல நிகழ்ச்சி இது. தைராயிட் (thyroid) இத்தனை கடுமையான வியாதி என்று எனக்கு இதுவரை தெரியாது. ஆஸ்துமா சின்ன வயதில் வந்தவர்கள் தைரியமாக இந்ஹலெர் (inhaler) தொடர்ந்து உபயோகிக்கலாம் என்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிந்தது. தாய்ப்பால் எத்தனை நாள் கொடுக்கணும், எப்படி கொடுக்கணும் போன்ற உபயோகமான தகவல்களும் கிடைத்தது.

அப்புறம் 'சுக ராகங்கள்/ ரஞ்சனி ஸ்ரீரஞ்சனி' நிகழ்ச்சி. திருப்பி திருப்பி கேட்டாலும் போரடிக்காத நிகழ்ச்சி! ராகங்களைப் பற்றிய தகவல்கள், கூட வரும் சினிமா பாடல்கள், கோபி-குமார் நகைச்சுவை நிறைந்த பேச்சு - எல்லாமே இனிமை!

அடுத்து வருவது 'உங்கள் விருப்பம்' நிகழ்ச்சி. சில முறை நல்ல பாடல்களில் ஆரம்பிக்கும். அதைத் தொகுப்பவர் நல்ல தமிழ் பேசினால் கேட்பேன். இன்று காலை மாதிரி 'கல் கல்' தமிழ் என்றால் ஆப் (off) செய்து விடுவேன். ஒரு பெண் குரல், 'உங்கல் விருப்பம் நிகழ்ச்சியில், உங்கலுக்கு பிடித்தமான பாடல்கலைக் கேட்கலாம்' என்று சொல்கிறது. ரேடியோவில் எப்படி இந்த மாதிரி பேசுபவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்? கமல் ஹாசன் 'தெனாலி' படத்தில் டி.வி. தமிழ் என்று சொல்வார். இப்பொழுது ரேடியோ தமிழ் கூட இதுதான் போலிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த மாதிரி பேசுபவர்கள் ரொம்ப கீழ் மட்டத்தினர், படிக்காதவர்கள் என்று சொல்வார்கள். இப்பொழுது ரேடியோவில் வரும் நிகழ்ச்சியில், மருத்துவர்கள் கூட பெரும்பாலும் இந்த தமிழ் பேசுகிறார்கள். நம்பவே முடியவில்லை. என் தங்கை ஒரு புகழ் பெற்ற பள்ளிக்கூடத்தில் (பல்லிக்கூடத்தில்!) ஆசிரியை. அங்கு இருக்கும் தமிழ் ஆசிரியை கூட இந்தத் தமிழ் தான் பேசுகிறார், என்கிறாள் அவள்! ஏற்கனவே தமிழ்க் காரர்கள் ஆங்கிலம் நிறைய கலந்து பேசுபவர்கள். ஹிந்தி நிகழ்ச்சிகளில் அழகாக நல்ல ஹிந்தி, ஆங்கிலம் கலக்காமல், பேசுகிறார்கள். கேட்கவே இனிமையாக இருக்கிறது. தமிழ் மொழியை தமிழ்க்காரர்களே கொல்கிறார்கள். நினைத்தாலே என்னவோ செய்கிறது.

நம் முதல் அமைச்சர் தமிழ் புலவர். அவர் நினைத்தால், முதலில் அவருடைய அமைச்சர்கள் நல்ல தமிழ் தான் பேச வேண்டும் என்று கட்டளை போடலாம். வாரத்தில் மூன்று நாள் ஒரு மணி நேரம் ஆசிரியர் வைத்து, நல்ல தமிழ் சொல்லி கொடுக்கலாம். நல்ல தமிழ் பிழைக்க ஏதாவது உடனே செய்தாக வேண்டும்.

ஜெயலலிதா சொன்னால் கண்டிப்பாக பயத்திலாவது அவர் கட்சியினரை நல்ல தமிழ் பேச வைக்க முடியும்! விஜயகாந்த் வந்தால், கொஞ்ச நஞ்சம் உயிர் இருக்கும் நல்ல தமிழும் செத்து விடும்!

யாராவது தமிழைக் காப்பாற்றுங்கள்!

Thursday, July 3, 2008

வீரப்பன்!

ஜூனியர் விகடனில் வீரப்பனைப் பற்றி மக்கள் தொலைக்காட்சியில் வந்துகொண்டு இருக்கும் தொடர் பற்றிய செய்தி படித்தேன்.

அவனை அவனுடைய சொந்தக்காரனே விஷம் வைத்துக்கொன்றான். அதன் பின் போலீஸ் அவனைச் சுட்டுக்கொன்றது என்று காண்பிக்கிறார்கள். இப்பொழுது போலீஸ் அந்த தொடர் தயாரிப்பாளரை மிரட்டிக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

வீரப்பன் செத்துப்போய் வருஷங்களாகி விட்டன. அவனைப்பிடிப்பதற்கு நம் அரசாங்கம் கோடிக்கணக்கில் செலவழித்திருக்கிறது. அவன் நூற்றுக்கணக்கில் யானைகளைக் கொன்றிருக்கிறான். எத்தனை மனிதர்களைக் கொன்றிருக்கிறான் - இவை எல்லாம் மறந்து போய்விட்டது. அரசியல் பண்ணுவதற்காக வீரப்பனை, நல்லவன் , அநியாயமாய் போலீஸ் கொலை செய்து விட்டது என்று 'மருத்துவர் அய்யா' போன்றவர்கள் இந்த விஷயத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நியாயமான அரசியல் என்று வரும்?

இதற்கு நடுவில், ஹிந்தி படத்தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா, வீரப்பன் மனைவியைச் சந்தித்து இருக்கிறார் - வீரப்பனைப் பற்றிய படம் எடுக்கப் போகிறாராம்! கடைசியில் வீரப்பனுக்கு சிலை வைப்பார்கள் போலிருக்கிறது!