Sunday, October 5, 2008

ராகமாலிகா - ஜெயா டிவி நிகழ்ச்சி, பாட்டுப் போட்டி

ஞாயிறுதோறும் காலை பத்து மணிக்கு ஜெயா டிவியில் வரும் 'ராக மாலிகா' நிகழ்ச்சி, இப்பொழுது இருக்கும் பாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் முதல் இடத்தில் இருக்கிறது. கடைசி சுற்றுக்களில் நன்றாகவே இருக்கிறது. ஹிந்தி பாட்டுப்போட்டி நிகழ்ச்சிகளில் இருக்கும் (ஸ்டார் வாயிஸ் ஆப் இந்தியா) சில முறைகளை இதிலும் கடைப்பிடித்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அவைகளில் சில:

1. பாடகர்கள் பாட்டை மனப்பாடம் செய்து பாட வேண்டும். இதனால் பாவம் கொடுப்பதில் கவனம் செலுத்துவது சுலபமாக இருக்கும்.

2. உச்சரிப்பில் இன்னும் கவனம் வேண்டும்.

3. பாட்டுக்களை தேர்ந்தெடுப்பதில் நிகழ்ச்சியெய் நடத்துபவரும் டிப்ஸ் கொடுக்கலாம் - இளையராஜா பாட்டு சுற்றில் கேள்விப்படாத பாட்டுக்கள் வந்தன. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்லி பாடுவது என்னும்போது, சிலர் பாட்டு வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம், அல்லது அந்த காலத்தில் புகழ் பெற்ற பாட்டு என்று சொல்லலாம். அதில் தவறு இல்லை. அனால், நிகழ்ச்சி நடத்துபவர்கள், பாடகர்களை குறைந்தது மூன்று பாட்டு இளையராஜாவுடையது பாடத்தெரிந்திருக்கநும் என்று சொல்லி, அதில் ஒன்றை பாடச்சொல்லலாம்.

4. நிறைய பேருக்கு ஷ்ருதி சுத்தம் இல்லை. நிறைய நடுவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள், நல்ல வேளை! முடிந்தவரை அவர்கள் 2 சுற்றுக்குள் ஸ்ருதியெய் சரி செய்து கொள்ளவேண்டும். ஒரு நல்ல பாட்டு சொல்லிக் கொடுப்பவரை வைத்து திருத்த முடிந்தால் திருத்தலாம்.

5. நடுவர்களாக வருபவர்கள் குரு இடத்தில் இருப்பவர்கள். அவர்களுக்கு காலைத்தொட்டு கும்பிட்டு ஆரம்பிக்கவில்லை என்றாலும், கையெடுத்து கும்பிட்டு முதல் பாட்டை ஆரம்பிக்கலாம். முடிவில் பரிசு வாங்கும்போதும் கண்டிப்பாக மரியாதை காண்பிக்க வேண்டும். இதை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்லிக் கொடுக்கவில்லையென்றால், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் இதை கண்டிப்பாக செய்ய வைக்க வேண்டும்.

நிகழ்ச்சி தொகுப்பாளராக வரும் பாலாஜி நன்றாக செய்கிறார். நல்ல வேளை, இப்பொழுது, recorded சிரிப்பு வருவதில்லை!

ராக மாலிகா இருநூற்று ஐம்பத்து வாரங்களைத் தாண்டிவிட்டது. ஐம்பத்து, நூறு, நூற்றி ஐம்பத்து, இருநூறு, இருநூற்றைம்பது வாரங்களைக் கொண்டாடும்பொழுது பாடியவர்கள், இந்த நிகழ்ச்சி மூலமாக இன்று பின்னணிப்பாடகர்களாக மலர்திருப்பவர்கள். நல்ல பாட்டுக்களைத் தேர்ந்தெடுத்து ரொம்ப நன்றாகப் பாடினார்கள். நல்ல பாட்டு தேர்ந்தெடுப்பதில் பாடகர்கள் இன்னும் கவனம் செலுத்தினால் இந்த நிகழ்ச்சியெய் வேறு எந்த பாட்டுப் போட்டி நிகழ்ச்சியும் முந்த முடியாது எனபது நிச்சயம்.